130 பொலிஸ் நிலையங்கள் இந்த வருடம் நிறுவப்படும்- பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Thursday, January 12th, 2017

நாட்டில் இந்த வருடத்தில் 130 பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் காரைநகரில் தலா ஒரு நிலையம் அமையும் என்று யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்.மாவட்ட பொது மக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடு முழுவதும் 600 பொலிஸ் நிலைங்களைக் கொண்டமைந்ததாக மாற்றம் செய்யப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் போதியளவு பொலிஸ் நிலையங்களோ பொலிஸாரோ இல்லை. அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 470 பொலிஸ் நிலையங்கள் நாட்டில் உள்ளன. நடப்பு வருடத்தில் 130 பொலிஸ் நிலையங்கள் நாட்டில் திறக்கப்படும். மொத்தமாக 600 பொலிஸ் நிலையங்கள் கொண்டமைந்ததாக இலங்கை மாற்றப்படும். என்றார்.

Capture-214

Related posts: