ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவிருந்த 1,989 மில்லியன் ரூபா மாத இறுதிக்குள் வழங்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

தமது அமைச்சினால் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவிருந்த 1,989 மில்லியன் ரூபாய் இந்த மாத இறுதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த கொடுப்பனவுகள் நிலுவையில் இருந்து வந்தது.
இதற்கு மேலதிகமாக, இந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 1,112 மில்லியன் ரூபாய் கொடுப்பனவையும் இந்த வருட இறுதிக்குள் முழுமையாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிர்மாணத்துறைக்கு பிரத்தியேகமாக புதிய அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
3 இலட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை!
நாடுமுழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளர்களை தொழில் முனைவோராக மேம்படுத்துங்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
எரிவாயு விநியோகம் தொடர்பில் எந்த அச்சமும் தேவையில்லை - இன்றுமுதல் வழமையான விநியோகம் இடம்பெறுவதாக லிற...
|
|