ஒன்றுகூடல் நிகழ்வுகள் அதிகரிப்பால் ஆபத்து – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, February 28th, 2022

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட் வகையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

புள்ளிவிபர ரீதியாக கொவிட் தொற்று தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்படாத போதிலும், இலங்கையில் கொவிட் பரவல் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

13 வது திருத்தம் மீளாய்வு செய்யவேண்டும் - தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை - அ...
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஒருவருக்கு பரிசோதனையில் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும் 14 நாட்கள் ...
வியாக்கியானம் என்ற போர்வையில் நாட்டின் சட்டத்தை கட்டுப்படுத்தவும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டு...