ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில்லியன் கணக்கில் பணம் இருக்கிறது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Monday, November 8th, 2021

ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில்லியன் கணக்கில் பணம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை செலுத்த அன்று கோட்டாபய ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்தார் – என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சுபீட்ச நோக்கு கொள்கை பிரகடனத்தில் 100 ஆயிரம் கிலோ மீற்றர் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என இந்நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்குள் கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடிவு செய்தபோது ​​தேர்தலை நிறுத்தக் கோரி எதிரணியினர் நீதிமன்றத்துக்கும் சென்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை மீளச்செலுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.

கோவிட் நெருக்கடியால் நாட்டின் அபிவிருத்திப் பணிகளைத் நிறுத்த அவர் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவாறே நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ந்தார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினார்.

இதேநேரம் 2015 ஆம் ஆண்டு இந்த நாடு கையளிக்கப்பட்ட போது ​​எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச 2019 இல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டை தான் பொறுப்பேற்றார். அந்த சமயம் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்து இனங்களுக்கிடையில் பிளவு ஏற்பட்டிருந்தது.

கோத்தபாய ராஜபக்ச தோல்வியடைந்தவர் என்ற தவறான கருத்தை எதிர்க்கட்சிகள் சமூகத்தில் பரப்பி வருகின்றன. நாட்டுக்கு தடுப்பூசிகளை கொண்டு வர வழியில்லை என்றனர். நாட்டில் தடுப்பூசி வழங்குவதை நடைமுறைப்படுத்த முறையான வழி இல்லை என்றனர். ஆனால் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இன்று வெற்றிகரமாக தடுப்பூசி ஏற்றிய முதல் 10 நாடுகளிடையே எமது நாடு உள்ளது.

கொவிட் நெருக்கடி நிலை இருந்த போதிலும் நாட்டின் நெடுஞ்சாலை அபிவிருத்திகளை தொடர எங்களுக்கு அறிவுறுத்தினார். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திய போதிலும் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக 1500 வீதிகளை மக்களிடம் கையளிக்க முடிந்துள்ளது.

ஆனால் இந்த நாட்டை நாம் தொடர்ந்து அபிவிருத்தி செய்து வருகிறோம். மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பாடசாலைக்குச் செல்லவும் நோயாளிகளை தாமதமின்றி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் விவசாயிகள் தங்கள் விவசாயப் பொருட்களை பொருளாதார மையங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லவும் இந்தப் பாதைகள் உதவும்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் 68 ஆயிரம் வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 14 ஆயிரம் வீதிகளின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 1500 வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேலும் 2 ஆயிரத்து 500 வீதிகள் திறக்கப்படும்.

அத்துடன் இந்நாட்டின் வீதிக்கட்டடமைப்பை போன்றே விவசாயிகளுக்கு நீர் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டு மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பாரிய திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சேதனப் பசளை பயன்படுத்தி நம் நாட்டை பசுமை நாடாக மாற்ற விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தோம். இரசாயனப் பசளைக்கு பதிலாக சேதனப் பசளைகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் வெற்றி பெறும் என நம்புகிறோம். இத்திட்டம் வெற்றி பெறுவதை விரும்பாதவர்கள் இதற்கு எதிராக செயற்படுகின்றனர். நாங்கள் அமைத்த வீதிகளில் சென்று போராட்டம் நடத்துகிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டு மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்ற நாம் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: