ஒக்ரோபர் 15 ஆம் திகதிமுதல் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளை மீண்டும் முன்னெடுக்க முடியும் – கல்வி அமைச்சின் செயலாளர் நம்பிக்கை !

Thursday, September 23rd, 2021

தரம் 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் 15 ஆம் திகதிமுதல் மீண்டும் திறக்க முடியும் என கல்வி அமைச்சு நம்புவதாக கல்வி அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் ஏற்கனவே சுகாதார அமைச்சிடம் இருந்து கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் பாடசாலைச் சூழலை சுத்தம் செய்ய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முடிந்த பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு ஏற்கனவே ஒரு முறையை உருவாக்கியுள்ளது,

அத்துடன் அனைத்துப் பாடசாலைகளையும் சுத்தம் செய்ய குறைந்தது இரண்டு வாரங்கள் தேவையாக இருக்கும்.

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சின் செயலாளரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பல்வேறு நிலைகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மக்கள் மத்தியில் தவறான போலிப் பிரசாரங்களைப் பரப்பும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும்  - ஜனாதிபதி எச்...
இலங்கையில் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்த அனுமதி - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்...
பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கோவிட் தடுப்பூசி - ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்ச...