ஒக்டோபர் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!
Thursday, October 12th, 2023
இந்த வருட ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 26 ஆயிரத்து 272 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அக்டோபர் மாதத்தில் 6,293 இந்திய நாட்டு பிரஜைகள் வருகை தந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 1 இலட்சத்து 042 ஆயிரத்து 528 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடமராட்சி கிழக்கில் அதிகாலை கடற்படையினர் திடீர் சோதனை - 239 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர கைது!
வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் இ...
மீண்டும் பாடசாலைக்கு சென்ற கையினை இழந்த வைசாலிக்கு பாடசாலை மாணவர்களால் மகத்தான வரவேற்பு!
|
|
|


