ஐ.நா பொதுச் சபையின் உப தலைவர் பதவி இலங்கையிடம்!

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடருக்கான உப தலைவர் பதவிக்கு இலங்கை தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தி உப தலைவர் பொறுப்பை இலங்கை வகிக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 72 ஆவது அமர்வு ஏதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை நடைபெறவுள்ளது.
ஆத்துடன் சிலோவாக்கியாவின் வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சர், மிரோஸ்லோவ் லைய்ஜாக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இறுதியாக 2007 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையின் 62 ஆவது கூட்டத்தொடரில் உப தiலைமைப் பொறுப்பை வகித்திருந்தது.
இதன்பிரகாரம் 72 ஆவது கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா சார்பான உப தலைவராக ஐ.நாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொஹான் பெரேரா செயற்படவுள்ளார்.
Related posts:
அங்கொடை துப்பாக்கிச்ட்டு விசாரணைகள் ஆரம்பம்!
நாட்டில் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அபாயம் - தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சுதத் ...
இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சி...
|
|