ஐ. நா அமைதிப்படையில் மேலதிகமாக இலங்கை இராணுவத்தினர்!

ஐ.நா அமைதிப்படை பணிகளுக்கு இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என இராணுவத்தளபதி மகேஸ்சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாலியில் நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிப்படையில் இலங்கைப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாகவும்இதன்மூலம் உலகின் ஏனைய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் படையினரை காட்டமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1960ஆம் ஆண்டிலிருந்தே இலங்கைப்படையினர் ஐ.நாவின் அமைதிப்படையில் அங்கம் பெற்றிருந்தனர்.
மேலும் இலங்கையின் 17 ஆயிரம் படைவீரர்களும் 300 அதிகாரிகளும் அமைதிப்படை பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மகேஸ்சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
சுற்றறிக்கை வெளியிடப்பட்டால் சேவையில் ஈடுபடத் தயார் -பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்தகூட்டணி...
சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு - ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ச...
அரசியல் தலையீடு - கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அணி - பல மூத்த வீரர்கள் விடைபெற உள்ளதாக தகவல...
|
|