ஐ.நாவின் துணைக்குழு இலங்கைக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளை தடுப்பது தொடர்பிலான துணைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையில் இந்த விசேட பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சித்திரவதைகள் மற்றும் ஒடுக்குமுறைகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து ஆராயும் நோக்கிலேயே குறித்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
நான்கு பேரைக் கொண்ட இந்தப் பிரதிநிதிகள் குழு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
சித்திரவதைகள் தொடர்பிலான ஐ. நா. அமைப்பின் பிரகடனத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கு உதவிகளை வழங்குதல் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை வழங்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது
Related posts:
|
|