ஐந்து தடயவியல் கணக்காய்வுகளும் பூரணப்படாது – சபாநாயகர் கரு ஜயசூரிய!

சம்பந்தப்பட்ட பின்னிணைப்புக்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள் இன்றி மத்திய வங்கியின் திறைசேரி முறி வழங்கல் குறித்த ஐந்து தடயவியல் கணக்காய்வுகளும் பூரணப்படாது என சபாநாயகர் கரு ஜயசூரியவினால் மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லக்ஷ்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவினால் மத்திய வங்கியின் ஆளுநருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பின்னிணைப்புக்கள் மற்றும் வெளிப்படுத்தல்களை உள்ளடக்கிய பூரணப்படுத்தப்பட்ட கணக்காய்வு அறிக்கைகளை விரைவில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்குமாறும் சபாநாயகர் பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய மத்திய வங்கியின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வில் புலனான விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பின்னிணைப்புக்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள் இன்றி தடயவியல் கணக்காய்வு பூரணப்படாது எனப் பல்வேறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
Related posts:
|
|