ஐநாவின் வெளிநாட்டு அமைச்சர் மட்டத்திலான மகாநாடு ஆரம்பம் – அரச தலைவர்கள் மகாநாடு நியூயோர்க் நகரில் நாளை !

Monday, September 20th, 2021

கொரோனா தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி’ என்ற தொனிப்பொருளில், ஐக்கிய நாடுகள் அரச தவைவர்கள் மகாநாடு நாளை 21ஆம் திகதி, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை பொதுச் சபையின் வெளிநாட்டு அமைச்சர் மட்டத்திலான மகாநாடு இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.. இந்நிலையில் குறித்த கூட்டத்தொடர்களில் பங்கேற்பதற்காக, அரச தலைவர்கள் பலரும், நியூயோர்க் நகரைச் சென்றடைந்துள்ளனர்.

இதனிடையே அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாவது நாள் முற்பகல் வேளையில், ஜனாதிபதி  தனதுரையை ஆற்றவுள்ளார்.

இதேநேரம் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள எரிசக்தி தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின் போதும், ஜனாதிபதி தனது கருத்துகளை முன்வைக்க எதிர்பார்த்திருக்கிறார்.

இதற்கிடையே, கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடன், இரு தரப்புக் கலந்துரையாடல்களையும் ஜனாதிபதி  மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: