ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்ககள் பொலிஸாரால் கைது!
Monday, December 10th, 2018
அரசாங்க வங்கியொன்றுக்கு சொந்தமான ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையிட வந்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை வெலிமடை – கெப்பட்டிபொல நகரில் இந்த ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையிட முயற்சித்த வேளை அங்கு பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை சமிக்ஞை ஒலித்துள்ளதால் கொள்ளையிட வந்த இரண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவை பயன்படுத்தி மேற்கொண்ட விசாரணைக்கு அமைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிமடை காவல்துறை தெரிவித்துள்ளது.
Related posts:
நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம்!
20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் செப்டம்பரில் சமர்பிக்கப்படும் - நீதி அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!
19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பலவீனமே ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் - அமைச்சர் ஜீ.எல்....
|
|
|


