அரசியலமைப்பு பணிகள் தடைப்படவில்லை : லால் விஜேயநாயக்க

Thursday, July 13th, 2017

அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் தடைப்படவில்லை என அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க கூறியுள்ளார்.

அரசியமைப்பு தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் மதகுருமார் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு உரிமை உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் அரசியலமைப்பில் உள்ளக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாடாளுமன்றமே மேற்கொள்ளும் எனவும் லால் விஜயநாயக்க குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு பேரவையால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, மேலதிக கலந்துரையாடலுக்காக அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிற்கு அனுப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


இலங்கை - இந்தியா இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளமையை உணர்ந்து வியக்கின்றே...
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை நிறுத்துங்கள் - பொலிஸ் மா அதிபர் அவசர உ...
நாட்டின் நிதி நெருக்கடிக்கு அரசு மட்டுமே பொறுப்பல்ல - நாடாளுமன்றம் மூலமே தீர்வு காண்பது அவசியம் - அம...