ஏழைகளின் கனவை நனவாக்கும் முயற்சியில் தனியார் துறைகளில் மெத்தனப்போக்கு வருந்தத்தக்கது – ஜனாதிபதி!

Friday, September 18th, 2020

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் கனவை நனவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.எனினும் பொது மற்றும் தனியார் துறைகளில் மெதுவான நடவடிக்கைகள் இருப்பது வருந்தத்தக்கது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு, கட்டுமான கட்டடப் பொருட்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (17) பிற்பகல் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி போட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கலந்துரையாடலில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவிக்கையில்,

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாவட்ட அளவில் 1500 வீட்டுவசதி அலகுகளை நிர்மாணித்து 70,100 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.

அரசு மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வீடுகளை வாங்க நீண்ட கால கடன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: