ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்த முடியாது – வர்த்தமானி வெளியாகியுள்ளது…!

Sunday, March 22nd, 2020

ஏப்ரல் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்தலை அன்றைய தினம் நடாத்த முடியாது என்பதற்கான வர்த்தமானி வெளியாகியுள்ளது.

1981 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24-3 சரத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு காணப்படும் அதிகாரத்துக்கு அமைய குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட்-19 தொற்று காரணமாக முன்னர் அறிவிக்கப்பட்டவாறு ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடாத்த முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 30 திகதிக்கு பின்னரான 14 நாட்களுக்கு பின்னர் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேர்தலை நடாத்தும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts:

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் திட்டத்தின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் - பிரதமர...
நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகம் முன்னெடுப்பு - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
அமெரிக்காவுக்கு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி – அடுத்த வாரம் ஜேர்மன் செல்லவுள்ள...