ஏப்ரல் 21 தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு எதிராக 5 மேல் நீதிமன்றங்களில் வழக்கு – அமைச்சர் சரத் வீரசேகர !

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக 5 மேல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் வழக்கு விசாரணைகளை முன்கொண்டு செல்வதற்கான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ட்ரயல் அட் பார் (Trial at Bar) எனப்படும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கான ரஷ்ய மற்றும் அமெரிக்க தூதுவர்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கடன் சந்திப்பு
கொரோனா வைரஸ்: நேற்றும் இத்தாலியில் 743 பேர் பலி..!
வடக்கில் 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு துரித நடவடிக்கை - ஆசிரியர்களுக்கென தனியான பேருந்து சேவைய...
|
|