எல்லை நிர்ணய அறிக்கை மேலும் தாமதமாகும் – சபாநாயகர் கரு ஜயசூரிய!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் சம்பந்தமாக தொடர்ந்தும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய தேவை இருப்பதால், தமது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் இரண்டு மாத காலம் அவசியம் என எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட மீளாய்வு குழு, சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் சபாநாயகர் இது சம்பந்தமாக அறிவித்துள்ளார்.
எந்த நிலைமையாக இருந்தாலும் துரிதமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியது அத்தியவசியமான விடயம் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
அதேவேளை எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை தொடர்ந்தும் தாமதமாவது சம்பந்தமான அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்து, அமைச்சரவையின் கருத்தை உடனடியாக கட்சித் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|