எல்லை நிர்ணயம்:  இறுதித் தீர்மானத்துக்காக  சர்வகட்சி மாநாடு!

Thursday, September 29th, 2016

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க சர்வகட்சி மாநாடு நடத்தப்படும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எல்லை நிர்ணயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதற்கு முன்னதாக பரிந்துரை செய்யப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கைக்கு அனைத்து கட்சிகளும் நிராகரித்திருந்தன.

மீளவும் அவ்வாறான ஓர் நிலைமை உருவாவதனை தவிர்க்கவும், ஜனநாயகத்தை முழு அளவில் உறுதிப்படுத்தவும் இந்த சர்வகட்சி மாநாடு நடத்தப்படவுள்ளது. எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 15ம் திகதி அளவில் எல்லை நிர்ணய இறுதி அறிக்கை தமக்குக் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சர்வகட்சி மாநாடு நடத்தும் திகதி பற்றி தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

faizer_musthafa_004

Related posts:

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு வெளியான செய்தி உண்மைக்குப் புரம்பானது - இராணுவத் தளபதி!
காய்ச்சல், தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நாடுங்கள் - தேசிய டெங்கு கட்டுப்பா...
ரஷ்யா - உக்ரைன் போர் இலங்கைக்கு சாதகமாக உள்ளது - ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தெரிவிப்பு...