எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!
Monday, March 25th, 2019
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த 11 இந்திய மீனவர்களை நேற்று (24) அதிகாலை காங்கேசன்துறை கடற்படையினர் அனலைதீவு கடற்பரப்பில் கைதுசெய்துள்ளதுடன் மாலை யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளின் மூலமாக இராமேஸ்வரத்தில் இருந்து வருகை தந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உடமைகள் என்பன அரசயுடமைக்கயாக்கபட்டுள்ளது.
மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஏ.யுட்சனினுடைய வாசஸ்தலத்திற்கு அழைத்து சென்றபோது அவர்களை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
செப்டம்பர் 01 முதல் இலத்திரனியல் அடையாள அட்டை!
தாஜூதீன் கொலை : அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் அறிகுறி!
இன்று அமைச்சரவை மாற்றம்!
|
|
|


