எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!
Sunday, January 8th, 2017
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த ஆறு இந்திய மீனவர்களை நெடுந்தீவு பகுதியில் வைத்து இலங்கைக் கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்கள் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஜகதாப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டு யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து ஒரு டோலர் படகு, மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் இன்று யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
உயிர்ப்பாதுகாப்புள்ள சிறந்த 34 நாடுகளில் இலங்கைக்கும் இடம்!
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வழமைக்கு கொண்டுவரப்படும் - பிரதிப் பொலிஸ்மா அ...
உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
|
|
|
தலையில் இரும்புக் கம்பியால் பலமாக குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் இளைஞர் ஒருவர் யாழ். போதனாவில் அனுமதி...
நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரம் - அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார தரப்பினர் எச்சர...
18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி - தேர்தல்க...


