எரிவாயு வெடிப்பை வைத்து எதிர்க்கட்சி அரசியல் இலாபம் தேடுகிறது – இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு!
Saturday, December 4th, 2021
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் அடைய நினைப்பதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு மேற்கொண்டிருந்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கையினை முன்னெடுக்க தயாராகி வருகிறது. ஏனென்றால் மக்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற எந்தவொரு விடயத்தினையும் அரசாங்கம் அனுமதிக்காது.
எதிர்க்கட்சியினர் இவ்வாறான சம்பவங்களை அரசியல் மயப்படுத்த வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழ் மொழி பாடசாலைகளில் மாணவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வாரத்தில் ஒருநாள் தமிழ் பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் செயற்பாடு, உடை முதல் ஏனைய செயற்றப்படுகளை முன்னெடுக்குமாறும் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் பிள்ளைநாயகமிடம் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளை தரமுயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


