எரிவாயு விநியோகம் தொடர்பில் எந்த அச்சமும் தேவையில்லை – இன்றுமுதல் வழமையான விநியோகம் இடம்பெறுவதாக லிற்றோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022

எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிற்றோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.

மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் இன்று (08) முதல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்

எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாசாங்கு செய்யும் நோக்கில் சிலர் எரிவாயு இருப்புக்களை மறைத்து செயற்படுவதாகவும் அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

அதன்படி, இன்று காலைக்குள் 120,000 சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் முதித பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தரவுகள் சரியாக பேணப்படாமையால் தகுதியற்றோருக்கும் அரிசி - தகுதியானோர் பாதிப்பு - துறைசார் மேற்பார்வைக...
இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பின்றி அறிக்கை விடுகின்றன - வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெட...
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொறிமுறையுடன் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு அக்கற...