எரிபொருள் விலையை மேலும் 7 ரூபாயால் அதிகரிக்கத் திட்டம் – கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சு ?

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை ஈடுசெய்வதற்காக எரிபொருள் விலையை மீண்டும் 7 ரூபாயால் அதிகரிக்க வேண்டுமென கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
டீசல் மற்றும் பெற்றோலுக்கு மேலதிகமாக தற்போது மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 70 ரூபாய்க்கு விநியோகிக்கப்படுவதால் இந்த நட்டம் ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் முன்னதாக அதிகரிக்கப்பட்ட விலை பல மணி நேரத்தின் பின்னர் கைவிட்டமை மற்றும் மீண்டும் நேற்று முன்தினம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக கூட்டுத்தாபனத்திற்கு 41 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
சமையல் எரிவாயு, பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்!
யாழ்ப்பாணத்தில் மாமரங்கள் பூத்துக் காய்க்கின்றமை முன்னரைவிட இந்த வருடம் அதிகம்!
வெளிநாட்டவர்கள் மூவர் கைது!
|
|