எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ஹெஜின் உடன்படிக்கைக்கு திட்டம் – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024

சர்வதேச சந்தையில் இடம்பெறும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்கொள்ள நேரும் நிலையை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் ஹெஜின் உடன்படிக்கை கொடுக்கல் வாங்கல்களுக்கு பிரவேசிக்க உள்ளதாக எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்சார ஹெஜின் கொடுக்கல் வாங்கல்களில் பிரவேசிக்கவில்லை என்பதையும் அவர் சபையில் தெரிவித்தார்

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், தயாசிறி ஜயசேக்கர எம் பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேக்கர எம்பி தமது கேள்வியின் போது,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கால இழப்புக் காப்பு கொடுக்கல் வாங்கல்களை நாடுவதற்கான காரணங்கள் யாவை? எதிர்காலத்திலும் நட்டங்கள் ஏற்படக்கூடிய எதிர்கால இழப்புக் காப்பு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் அவர் வினவினார். இற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: