எரிபொருள் விலைச் சூத்திரம் அமுலாக்கம்!

நாட்டில் புதிதாக அமுலாக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரம் உரியவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறந்த பலனைப் பெற முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெப்ஃரி ரைஸ், நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட முக்கிய விடயமாக புதிய விலைச்சூத்திர அமுலாக்கம் அமைந்திருக்கிறது. இதன் ஊடாக நிதி அபாயத்தை தவிர்த்துக் கொள்ள முடியும்.
அத்துடன் இந்த மறுசீரமைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை நிதி அமைச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
புதிய அரசியலமைப்பு வரைவு ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்?
யாழ்.மாநகரை திங்கள்முதல் முடக்கலில் இருந்து விடுவியுங்கள் – வணிகர் சங்கம் கோரிக்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் - பிரதமர் தினே...
|
|