எரிபொருள் விலைகுறித்து தீர்மானம்!

உலக சந்ததையில் எரிபொருள் மாற்றத்திற்கு அமைய எரிபொருட்களின் விலையை இலங்கையில் பேணுவது தொடர்பாக நிதி அமைச்சு தமது பரிந்துரைகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு, ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அதிகரிப்பு 12 மணி நேரத்தினுள் இரத்து செய்யப்பட்டது. இதனால், சற்று குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கிலேயே இந்த பரிந்துரைகள் அமையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் எண்ணெய் விலை மாற்றம் அடையும் போது, உடனுக்கு உடன் இலங்கை விலையையும் மாற்றுவதன் மூலம் நட்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என கருதப்படுகின்றது.
Related posts:
தற்கொலை அங்கி மீட்பு: வடக்கின் படைக் குறைப்புக்கு தடையாகாது! - பாதுகாப்பு செயலாளர்
மாலி நாட்டிற்கு இலங்கை இராணுவக் குழு பயணம்!
மடுமாதா ஆலயத்துக்குள் விசேட பாதுகாப்பு !
|
|