எரிபொருள் விலைகள் குறைப்பு!
Friday, November 2nd, 2018
கடந்த ஆட்சிக் காலத்தில் சடுதியாக உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 145 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
டீசலின் விலை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, டீசலின் புதிய விலை 123 ரூபாவில் இருந்து 116 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் ஏற்படுத்தப்பட்ட புதிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் மாகாணசபை மாங்குளத்திற்கு மாறுமா?
அலுவலகங்களில் கைவிரல் அடையாள பதிவு - கட்டாயமாக்கப்படவுள்ளது!
அவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
|
|
|


