வடக்கில் பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கலாம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!

Monday, May 6th, 2019

நாட்டில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து, வடக்கு மாகாணப் பாடசாலைகளை காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளைத் தொடங்குதல் தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்களின் கருத்துக்கள் கண்டறியப்பட்டு, வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

அதில் பாதுகாப்புப் படையினரின் சோதனை நடவடிக்கைகளால் மாணவர்களின் போக்குவரத்து, அதிபர்கள், ஆசிரியர்களின் போக்குவரத்தில் ஏற்படும் தாமதம் என்பன சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் பாடசாலைகளை காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 2.00 மணிக்கு நிறைவு செய்வதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்

அதாவது பாடசாலைகளை காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்க, பாடசாலையின் அதிபர்கள் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்றுக் கொள்ளமுடியும். இது ஒரு தற்காலிக ஏற்பாடகவே இருக்கும்.

ஆகையால் இடர்பாடுகள் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியைப் பெற்று பாடசாலைகளை காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.

Related posts: