எரிபொருள் விநியோகத்தின் போது பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்குங்கள் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கோரிக்கை!
Monday, February 28th, 2022
எரிபொருள் விநியோகத்தின்போது, பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இன்மையால் பாரிய அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் தரப்பரீட்சை இடம்பெற்று வருவதுடன், அலுவலக பணிகள் ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்காக பொதுப்போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
எனவே, எரிபொருள் விநியோகத்தின் போது, பொதுப்போக்குவரத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேவைக்கேற்ப பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


