எரிபொருள் வரிசையை குறைக்க எதிர்வரும் சில தினங்களில் மேலதிகமாக எரிபொருள் – டீசலை விநியோகிக்கும் நடவடிக்கையும் ஆரம்பம்!

Monday, August 29th, 2022

நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் எதிர்வரும் 02 நாட்களில் மேலதிக எரிபொருள் கையிருப்பை நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளதாவது ,

எரிபொருளை இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாமதமாக பணம் செலுத்துவதால் எரிபொருள் வரிசைகள் மீண்டும் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

போதியளவு எரிபொருள் கையிருப்புக்கள் இல்லாத காரணத்தினால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், திறந்திருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதையும் காணமுடிகிறதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டீசலினை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெற்றோலிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 500 முதல் ஆயிரம்  மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: