குருதிக்கொடையின் மகத்துவத்தை முன்னிறுத்தி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் இரத்ததான முகாம்!

Thursday, November 10th, 2016

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அகியவற்றில் இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டு வருகின்றது.

குருதிக்கொடையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டே குறித்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வை மேற்கொண்டுவருகின்றனர்.

1

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களையும் சந்திக்கின்றோம். ஒருவர் விபத்தினாலோ அல்லது வேறு ஏதாவது நோயினாலோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது அங்கு அவசரமாக தேவைப்படுவது குருதியாகும். அத்தகைய குருதியை தானமாக வழங்கவதற்கு பலர் முன்வருவதில்லை. இன்று அதிகளவாக தேவைப்படும் குருதியை தானமாக வழங்கவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இன்றையதினமும் குறித்த நிகழ்வை டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

00064.MTS.00_00_10_05.Still002

இன்றைய இரத்ததான நிகழ்வை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா, பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சண்முகராஜா உள்ளிட்டோருடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) மற்றும் சுவிஸ்சர்லாந்து பிராந்தியத்திற்கான முக்கியஸ்தர் திலக் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான குறித்த இரத்ததான நிகழ்வு இன்று மாலை 5 மணிவரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

2

5

3

4

00079.MTS.00_00_09_08.Still001

Related posts: