எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Saturday, September 10th, 2022
வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாகனம் அல்லா எரிபொருள் தேவைக்கான QR குறியீட்டு முறைமையும் தயாராக உள்ளதென அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மின்பிறப்பாக்கிகள், புல்வெட்டும் இயந்திரங்கள் உட்பட ஏனைய இயந்திரங்களுக்கான QR குறியீட்டு முறைமைக்கான பதிவு முறைமை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
H1.N1 நோய் தொற்றுக்கு சிகிச்சை கொடுப்பதில் சிக்கல்!
பிரதமர் மஹிந்த அரசியலிலிருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் ...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பம்!
|
|
|


