எரிபொருள் துறையில் புதிய திட்டங்கள் – ஷெல் இன்டர்நெஷனல் நிறுவனம் வரையறுக்கப்பட்ட ஆர்.எம்.பார்க் நிறுவனம் கூட்டாக அறிவிப்பு!
Wednesday, March 27th, 2024
இலங்கையின் எரிபொருள் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் ஷெல் இன்டர்நெஷனல் நிறுவனமும் வரையறுக்கப்பட்ட ஆர்.எம்.பார்க் நிறுவனமும் கூட்டாக அறிவித்துள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு ஷெல் நிறுவனம் தங்களது எரிபொருள் நிலையங்களை இலங்கையில் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நிறுவனத்தின் கீழ் தற்போது இலங்கையில் உள்ள 150 எரிபொருள் நிலையங்களையும் மறுபெயரிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், ஷெல் நிறுவனம் தங்களது புதிய எரிபொருள் வர்த்தக நிலையங்களை 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆரம்பிக்கும் என எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 60 வருடங்களின் பின்னர் ஷெல் நிறுவனம் தங்களது வர்த்தக நாமத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பல்கலைமாணவர்கள் உயிரிழப்பு தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் பொலிஸ் ஆணைக்குழுவிடம்!
மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் 1 ஆம் திகதி ஆரம்பம்!
500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டை வந்தடைந்தது - சீன வெளி...
|
|
|


