எரிபொருள்களின் விலை குறைப்பு – பேருந்து, ஓட்டோ என்பனவற்றின் கட்டணம் 4 வீதத்தால் குறைப்பு!

Thursday, December 27th, 2018

இடைக்கால கணக்கறிக்கையின் மூலம் எரிபொருள்களின் விலைகளை அரசு குறைத்துள்ளதால் முச்சக்கர வண்டிக் கட்டணங்கள், பேருந்துக் கட்டணங்கள் மற்றும் பாடசாலை வாகனங்களின் கட்டணங்கள் என்பனவற்றை நேற்று நள்ளிரவு முதல் குறைக்க உரிய தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

கடந்த 21 ஆம் திகதி இடைக்கால கணக்கறிக்கையை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். அதன் பிரகாரம் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன. பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவாலும் டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துக் கட்டணமும் முச்சக்;கர வண்டிக் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே பேருந்துக் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்படுகின்றது என்று தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது. அதேபோல் இலங்கைப் போக்குவரத்து சபையும் கட்டணங்களைக் குறைத்துள்ளது. இதேவேளை முச்சக்கர வண்டிக் கட்டணங்களும் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. 50 ரூபா ஆரம்ப கட்டணம் என்ற அடிப்படையில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அறவிடப்படவுள்ளன.

Related posts: