எரிபொருளை விநியோகிப்பதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை – அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா அறிவிப்பு!
Sunday, September 12th, 2021
எரிபொருளை விநியோகப்பதில் பிரச்சினை இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு பகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்ற போதும் நாட்டில் எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றும் அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சனிக்கிழமைகளில் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வைத்தியசாலையில் நாமல்!
மேலும் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்றிரவு இலங்கைக்கு - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியது!
|
|
|


