எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Monday, October 25th, 2021

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதேவேளை

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்றும்’ நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து கருத்துரைத்த அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன எதிர்கால ஒன்றிணைந்த அரசியல் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உரப் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட சகலதுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்கத்திற்குள் ஏதாவது பிரச்சினை காணப்படுமாயின் வெளியே சென்று கருத்துரைக்காமல், அரசாங்கத்திற்குள்ளேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பிரச்சினைகளை இதன்போது வெளிப்படுத்தியதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: