எரிசக்தி துறையுடன் இணைக்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்!
Thursday, December 15th, 2022
முதலீட்டுச் சபையினால் பெறப்பட்டுள்ள எரிசக்தி துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
முதலீட்டு சபையினால் பெறப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான எரிசக்தி அதிகார சபையினால் ஒரு வாரத்திற்குள் மதிப்பீடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏனைய சாத்தியமான புதுப்பிக்கத்தக்க திட்டங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், கட்டண சூத்திரங்கள் மற்றும் தொழில்துறையில் மின்சார விலை நிர்ணயம் ஆகியவை தொடர்பிலும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
35 நாட்களில் தொடருந்து விபத்தில் 57 பேர் பலி !
இரு அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம் - வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
அடுத்த வருடத்தில் இருந்து நீர் உற்பத்தி - விநியோக நடவடிக்கைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் ...
|
|
|


