எயிட்ஸ் வதந்தி: பாதிக்கப்பட்ட மாணவனுக்கு கண்டி திருத்துவக்கல்லூரி அனுமதி!
Sunday, March 6th, 2016
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தி காரணமாக பல பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்பட்;டுள்ள குளியாபிட்டி மாணவனிற்கு கண்டிதிருத்துவக்கல்லூரி அனுமதி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
குறிப்பிட்ட சிறுவனை திருத்துவகல்லூரியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக பழையமாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் இதனை குறிப்பிட்ட மாணவனின் குடும்பத்திற்கும் அறிவித்துள்ளனர்.
மேலும் அந்த மாணவனின் எதிர்கால கல்விக்காக நிதியமொன்றை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.கடந்த வாரம் பெற்றோர்களின் எதிர்ப்பை தொடர்ந்து குருநாகலின் பாடசாலையொன்றிலிருந்த அந்த மாணவனை கல்வி அதிகாரிகள் நீக்கியமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய தேசிய வருமான வரி சட்டமூலம் இன்று!
ICC இனது கட்டாய ஊடக சந்திப்பினை புறக்கணித்தது இலங்கை அணி!
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை !
|
|
|


