எம்.பி.களது கல்வித் தகைமை குறித்த தகவல் பாராளுமன்றில் இல்லை!

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருடையவும் கல்வித் தகைமைகள் குறித்த தகவல்கள் பாராளுமன்றத்தில் காணப்படாதுள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதியாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்த பிறகு, அவர்களது கல்வித் தகைமைகள் குறித்து கண்டறிவதற்கான பொறிமுறையொன்று காணப்படாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புட்டான் போன்ற நாடுகளில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டுமாகவிருந்தால், அவர் பட்டதாரியாகவிருக்க வேண்டும் என்ற நிபந்தனை காணப்படுவதாகவும் 60 அல்லது 65 ஐ தாண்டியிருப்பவருக்கு அந்நாட்டில் பொதுமக்களிடம் வாக்குக் கேட்க முடியாது எனவும் நிபந்தனைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
வடக்கு கிழக்கில் வறுமை மட்டம் அதிகம் - மத்திய வங்கி ஆளுநர்!
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் யாழ். மாநகர சபையினர் பாரபட்சம் -பொதுமக்கள் குமுறல்!
ஒருவருக்கு மாத்திரம் அனுமதி - சிறைச்சாலைகள் திணைக்களம்!
|
|