எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்!
Wednesday, January 2nd, 2019
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனிக்கான இறக்குமதி வரி உயர்வு!
இலங்கை பொலிஸார் தனிப்பட்டவர்களது சொத்தல்ல!
நெருக்கடியான சூழல்களின்போது அனைவரும் தியாகங்களை செய்ய நேரிடும் - அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் ப...
|
|
|


