எமது கட்சியையும், தலைமையையும் பலப்படுத்த அனைத்துத் தோழர்களும் முன்வர வேண்டும் – தோழர் மாட்டின் ஜெயா அழைப்பு
Wednesday, November 21st, 2018
எமது கட்சியையும், தலைமையையும் மேலும் பலப்படுத்த அனைத்துத் தோழர்களும் அக்கறையுடன் உழைக்க முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளருமான தோழர் மாட்டின் ஜெயா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (20) இடம்பெற்ற மாவட்ட நிர்வாக உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஆயுத ரீதியான போராட்டத்தினால் ஏற்பட்ட தோல்விகளிலிருந்து மீளெழுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக எமது மக்கள் விவசாயப் புரட்சிகளின் ஊடாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், எமது பிரதேசங்களையும் அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்வதற்கு எமது தோழர்கள் வழிகாட்டிகளாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
குறித்த சந்திப்பில், மாவட்ட நிர்வாகச் செயலாளர் திலீபன் உள்ளிட்ட ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், வர்த்தக சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Related posts:
|
|
|


