என்ஜின் சாரதிகள் தொடர்பில் இராணுவம் விடுத்துள்ள தகவல்!
Thursday, August 30th, 2018
ரயில் என்ஜின் சாரதி பயிற்சி வழங்குமாறு இராணுவம், பாதுகாப்பு அமைச்சிடம் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கொழும்பு ஊடகமொன்றுக்கு இது பற்றி தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளின் போது இலங்கை இராணுவம் ஆயத்த நிலையில் உள்ளது.
இதன் ஓர் கட்டமாக இராணுவ உத்தியோகத்தர்களுக்கு ரயில் என்ஜின் சாரதி பயிற்சி பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டங்களை இலக்கு வைத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, என்ஜின் சாரதி பயிற்சி வழங்குமாறு இராணுவம் விடுத்த கோரிக்கை குறித்து ஆராயப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
முதலமைச்சரை சுற்றிவளைத்த பட்டதாரிகள்! வடமாகாண சபை முற்றுகை!
யாழ்ப்பாணம் நோக்கி வந்த புகையிரதம் தீப்பற்றியது!
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை...
|
|
|


