எந்தவொரு தொலைபேசி உரையாடல்களும் பதிவுசெய்யப்படவில்லை – வதந்திகளுக்கு பாதுகாப்பு அமைச்சு பதில்!

நாட்டில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்யப்படுவதாகவும், வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. எனினும் இந்த செய்திகள் வெறும் வதந்திகள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு, இதுபோன்ற தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதோ, தொலைபேசி அழைப்புகளை சேமித்து வைப்பதோ அல்லது வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிப்பதோ இல்லை என பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.
எனவே சமூக ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
20 ஆம் திகதியின் பின்னர் காலநிலையில் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் :ஆராய்கிறார் பிரதமர் ரணில் !
வாகன இறக்குமதித் தடை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவதற்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்!
|
|