எந்தவொரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
Tuesday, July 12th, 2022
எந்த ஒரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியத் தலைவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் காணொளிகளில் உண்மையில்லை என அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் உயர்பீட தலைவர்கள் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டிலேயே தங்கியிருப்பார்கள் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீரற்ற வானிலை - 14,164 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
13 ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் – பௌத்த பிக்குகள் தெரிவிப்பு!
நாட்டை கட்டியெழுப்பும் மாற்று யோசனைகளுக்கு வாய்ப்பு வழங்க தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்...
|
|
|


