எந்தவொரு அரச நிறுவனமும் மூடப்படாது – பிரதமர் தினேஸ் குணவர்தன உறுதிபடத் தெரிவிப்பு!
Tuesday, January 31st, 2023
எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதாரம் மற்றும் சமூக நிலையில் தொடர்பில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலையில் தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன. அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எந்த அரச நிறுவனங்களையும் மூடுவதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மேல்மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!
குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் ...
தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்ப மயப்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் - ஆட்பதிவு திணைக்களத்...
|
|
|


