எத்தனை நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன் – அமைச்சர் ராஜித !
Friday, August 25th, 2017
10 நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் ஊழல்வாதிகள், கொலையாளிகளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எந்த அடிப்படையும் இன்றி அங்கும் இங்கும் பொறுக்கி எடுத்துக் கொண்ட சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கூட்டு எதிர்க்கட்சியினர் வங்குரோத்தான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.கூட்டு எதிர்க்கட்சியின் அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் நான் வெற்றி பெறுவேன் என்றும் இறுதியில் என் மீதான நம்பிக்கை உறுதியாகும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தெற்கின் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பது மிக சாத்தியமானதாக்கப்பட்டது போன்று வடக்கு மாணவர்களுக்கும...
திருகோணமலையில் கடற்றொழிலுக்கு சென்ற மூவரை காணவில்லை!
நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவசியம் - ஜனாதிபதி ரணி...
|
|
|


