மருந்தை அதிக விலைக்கு விற்ற நிறுவனத்திற்கு சட்ட நடவடிக்கை!
Friday, April 28th, 2017
புற்றுநோய்க்காக வழங்கும் மருந்தை நோயாளிக்கு அதிக விலையில் விற்ற தனியார் மருந்தகம் ஒன்று தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவுக்கு குறித்த மருந்தை இறக்குமதி செய்துள்ள அந்த நிறுவனம், அதனை நோயாளிக்கு 4 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. நோயாளி ஒருவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை கவனத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
2030 இல் இலங்கையின் வயோதிபர் சனத்தொகை 21 வீதமாக ஆக அதிகரிக்கும் - முதியோர்களுக்கான தேசிய சபை தெரிவிப...
சர்ச்சைக்குரிய கருத்து - இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த பதவியில் இருந்து இராஜினாமா!
யாழ்ப்பாண பொது நூல் நிலையம் புதுப்பொலிவுடன் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது அறிவுப்பொக்கிஷம்!
|
|
|


