எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் ஆலோசனைகளை வழங்கலாம் – ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி அறிவிப்பு!
Monday, November 15th, 2021
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி, பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து இந்த ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகக் குறித்த யோசனைகளை முன்வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைக்க விரும்புவோர் coi.consulations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்ப முடியும்.
அத்துடன், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, அஞ்சல் பெட்டி இலக்கம் 504, கொழும்பு என்ற முகவரிக்குக் குறித்த ஆலோசனைகளை எழுதி, அனுப்ப வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்...
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி!
வடக்கில் இராணுவம் இருக்க மக்கள் விரும்புகின்றனர் கூட்டமைப்பு மட்டுமே அகற்றக் கோருகிறது - முன்னாள் அம...
|
|
|


