எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை!

எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் உத்தியோகபூர்வமாக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நான்கு பிரிவுகள் மூலம் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள், இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பணியாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என 4 பிரிவுகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வர முடியும்.
விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் இடமாற்றம் உண்டு - கல்வி அமைச்சர்!
பூர்த்தி செய்யப்படாத வீதி அபிவிருத்தி பணிகளை பொறுப்பேற்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானம்!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் - சிறுவர் தொடர்பிலான் பல்வேறு பிரச்ச...
|
|