எதிர்வரும் 15 ஆம் திகத முதல் அமுலுக்கு வருகின்றது ஊழல் ஒழிப்பு சட்டம் – வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!

ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் 15 ஆம் திகத முதல் அமுலுக்கு வருவதனை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. 193 திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்ட இந்த சட்டமூலும் வாக்கெடுப்பின்றி கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் குறித்த சட்டத்தின் பிரகாரம் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய நபர்களின் பட்டியலில் ஜனாதிபதி, ஆளுநர்கள், தூதுவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தூதரகங்களின் நிறைவேற்று அதிகாரிகள் உட்பட பல தரப்பினரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|